டிரெண்டிங்

“வேட்பாளர் தேர்வில் பாரபட்சம் வேண்டாம்” - மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

“வேட்பாளர் தேர்வில் பாரபட்சம் வேண்டாம்” - மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Veeramani

வேட்பாளர் தேர்வில் பாரபட்சமாக செயல்படாதீர்கள், விருப்பு, வெறுப்பிற்கு இடம் கொடுக்காதீர்கள் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வேட்பாளர்களாக வாய்ப்பு கொடுங்கள். திமுக ஆட்சி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதை சரியாக பயன்படுத்தி, வெற்றியாக மாற்ற வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். எனவே இத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெற வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பிரச்சினைகள் மாறும். அதை அறிந்து வாக்குறுதிகளாக அளித்து பிரச்சாரம் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்


கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எப்போதும் வெற்றி பெறுவோம் என கூறுகிறீர்கள். இந்த முறை வெற்றி பெற்றேயாகவேண்டும்” என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.