டிரெண்டிங்

தண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

தண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

webteam

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றூ சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வறண்டது தண்ணீர், திரண்டது கண்ணீர் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ‌கலந்து கொண்டனர். அதில் பேசிய மு.க.ஸ்டாலின், தண்ணீர் பஞ்சம் குறித்து முதல்வர், துணை முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சர் கவலைப்படவில்லை என குற்றம் சாட்டினார். மழைக்காக யாகம் நடத்தியது தவறு என குறிப்பிட விரும்பவில்லை என தெரிவித்த ஸ்டாலின், தங்களது பதவிகளை காப்பாற்றிக்கொள்ளவே அதிமுகவினர் யாகம் நடத்தியதாக குற்றம் சாட்டினார். 

இதனைதொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை அதிமுக அரசு சரிசெய்யாவிட்டால், ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும் தண்ணீர் பற்றாக்குறைதான் நிலவுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக தண்ணீர் பிரச்னைக்காக போராட்டங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.