டிரெண்டிங்

“20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” - ஸ்டாலின்

“20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” - ஸ்டாலின்

rajakannan

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு பற்றி திமுக கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று  நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

நீதிபதி சத்தியநாராயணா அளித்த தீர்ப்பின் விவரம்:-

  • 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்
  • 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை
  • நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கம்
  • எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சட்டவிரோதம் இல்லை 

இந்நிலையில், தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. திமுகவை பொறுத்தவரை ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் எப்படி செயல்படுவது என ஆலோசனை செய்தோம்.

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு பற்றி திமுக கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

“18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; காலம் தாழ்ந்து தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு குறித்து 18பேரும் முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது” என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.