டிரெண்டிங்

கண்டிப்பாக நீட் தேர்வில் காப்பியடிக்க விடுவோம்: திமுக முன்னாள் அமைச்சர்

கண்டிப்பாக நீட் தேர்வில் காப்பியடிக்க விடுவோம்: திமுக முன்னாள் அமைச்சர்

webteam

திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நீட் தேர்வில் காப்பியடிக்க வைப்போம் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். 

திருச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரையின் போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விலக்க பெற முடியவில்லை என்றாலும், மாணவர்களை கண்டிப்பாக காப்பி அடிக்க விடுவோம். பீகாரில் காப்பியடிக்கிறார்கள், மத்திய பிரதேசத்தில் காப்பியடிக்கிறார்கள், திறந்துவிட்டு எல்லோரும் தேர்வு எழுதுகிறார்கள். இவ்வாறு இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் நாங்கள் எத்தனை நாட்களுக்கு உத்தமர்களாக இருப்பது” என்று கூறினார். நீட் தேர்வு நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், திமுகவின் முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.