டிரெண்டிங்

கொங்கு மண்டலத்தில் எந்த கட்சி முன்னிலை? விவரம் இங்கே

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதில் இன்று காலை 11 மணி நிலவரப்படி சேலம் மாநகராட்சியில், திமுக 13 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.  அதிமுக 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகளான, பாமக, பாஜக, நாதக, மநீம, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் எங்கும் முன்னிலையில் இல்லை. மொத்தம் 60 வார்டுகள் இருக்கும் நிலையில், அவற்றில் 13 வார்டுகளுக்கான நிலவரம் மட்டுமே தற்போது தெரியவந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் சேலம், கோவை, ஈரோடு போன்ற கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிமுக கூட்டணி, கணிசமாக வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது இம்மூன்று இடங்களிலுமே திமுக முன்னிலையில் உள்ளது. கோவையை பொறுத்தவரை, 100 வார்டுகளில் 18 வார்டுகள் நிலவரம் வெளிவந்துள்ளது. இந்த 18-லுமே திமுகதான் முன்னிலையில் உள்ளது. இதுவே ஈரோட்டில் 60 வார்டுகளில் 9 வார்டுகளுக்கு நிலவரம் வெளிவந்துள்ளது. அவை அனைத்திலுமே திமுகதான் முன்னிலையில் உள்ளது.

மேலும் வெளிவரத் தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும் : https://www.puthiyathalaimurai.com/tn-local-body-election-results