டிரெண்டிங்

கோவை: வால்பாறை நகராட்சியை பெரும்பான்மை வெற்றியுடன் கைப்பற்றிய திமுக

கோவை: வால்பாறை நகராட்சியை பெரும்பான்மை வெற்றியுடன் கைப்பற்றிய திமுக

நிவேதா ஜெகராஜா

கோவையில் 21 வார்டுகளில் 19 இடங்களில் வென்று வால்பாறை நகராட்சியை கைப்பற்றியது திமுக. வால்பாறை நகராட்சியில் அதிமுக, சுயேச்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துவரும் நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியை கைப்பற்றி உள்ளது திமுக. இந்த நகராட்சியில், 21 வார்டுகளில் 19 இடங்களில் திமுக-வும், ஒரு இடத்தில் சுயேச்சையும், 1 இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களார்கள் பெயர்கள், வார்ட் வாரியாக பின்வருமாறு:
1 வார்டு செல்வகுமார்
2 வார்டு கணகமனி
3 வார்டு வீரமணி
5 வார்டு கவிதா
6 வார்டு சத்தியவானிமுத்து
7 வார்டு கலாராணி
8 வார்டு இந்துமதி
9 வார்டு மகுடிஸ்வரன்
10 வார்டு காமாட்சி
11 வார்டு செந்தில்குமார்
12 வார்டு அன்பரசன்
13 வார்டு ராஜேஸ்வரி
14 வார்டு அழகு சுந்தரவல்லி
15 வார்டு ரவிச்சந்திரன்
16 வார்டு கீதாலட்சுமி
18 வார்டு ஜெயந்தி
19 வார்டு பால்சாமி
20 வார்டு மாரியம்மாள்
21 வார்டு உமா மாகேஷ்வரி.

இவர்கள் 19 பேருடன், சுயேச்சை சார்பில் 4-வது வார்டு பாஸ்கர் என்பவரும், அதிமுக கட்சி சார்பில் 17-வது வார்டு மணிகண்டனும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றி சான்றிதழை வழங்கினார். வெற்றி பெற்ற அனைவருக்கும், அவரவர் சார்ந்த கட்சியினர் சாலையில் பட்டாசு வெடித்தும் மேல தளங்கள் தட்டியும் வெற்றியை கொண்டாடினர்.