திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வைத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தோழமை கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி, 1. வட சென்னை, 2. தென் சென்னை, 3. மத்திய சென்னை, 4. ஸ்ரீபெரும்புதூர், 5. காஞ்சிபுரம், 6. அரக்கோணம், 7. வேலூர், 8. தருமபுரி, 9. திருவண்ணாமலை, 10. கள்ளக்குறிச்சி, 11. சேலம், 12. நீலகிரி, 13. பொள்ளாச்சி, 14. திண்டுக்கல், 15. கடலூர், 16. மயிலாடுதுறை, 17. தஞ்சாவூர், 18. தூத்துக்குடி, 19. தென்காசி, 20. திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
20 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் திமுக கட்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வைத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வேட்பாளர் பட்டியலை அளித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.