டிரெண்டிங்

கிருஷ்ணசாமி உருவபொம்மை எரிப்பு

கிருஷ்ணசாமி உருவபொம்மை எரிப்பு

webteam

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தான் காரணம் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி கூறியதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமானூர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து கிருஷ்ணசாமியின் உருவ பொம்மையை எடுத்துச் சென்ற திமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.