டிரெண்டிங்

தேமுதிகவுக்கு எம்.பி பதவியா..? முதலமைச்சர் சொன்ன விளக்கம்..!

தேமுதிகவுக்கு எம்.பி பதவியா..? முதலமைச்சர் சொன்ன விளக்கம்..!

Rasus

தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ கூட்டணி முடிவானபோதே, மாநிலங்களவை எம்.பி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. தேமுதிகவுக்கு, மாநிலங்களை எம்.பி பதவி வழங்கப்படுமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி தருவது குறித்து தலைமைக் கழகமே முடிவு செய்யும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.பி பதவியை கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் முடிவெடிப்பது அதிமுக தலைமைதான் என முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.