டிரெண்டிங்

சசிகலா எடுத்த தவறான முடிவே சிக்கலுக்கு காரணம்: திவாகரன்

சசிகலா எடுத்த தவறான முடிவே சிக்கலுக்கு காரணம்: திவாகரன்

Rasus

சசிகலா எடுத்த தவறான முடிவே சிக்கலுக்கு காரணம் என திவாகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திவாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “ அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே காரணம் சசிகலா மட்டும்தான். அவர் எடுத்த தவறான முடிவுகளே இந்த பிரச்சினைகளுக்கான முதற்காரணம். அதில் முதல் தவறு டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக ஆக்கியது.

இடைநீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக அழைத்திருப்பது மகிழ்ச்சியான செயல். ஆனால் யாரோ அவர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். அவர்களுடைய சுயலாபத்திற்காக (தினகரனை மறைமுக சாடுகிறார்). நானும்தான் ஒரு இயக்கம் வைத்திருக்கிறேன். எப்போதாவது அதிமுகவோடு சண்டை போடுகிறேனா. ஆனால் எப்போது பார்த்தாலும் டிடிவி தினகரன் அதிமுகவோடு சண்டை போடுவதும். அதை கைப்பற்றுவதும் தான் அவருடைய எண்ணமாக உள்ளது.

குட்டையை குழப்பி மீன் பிடிக்க பார்க்கிறார் தினகரன். மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பீதியை கிளப்ப கூடாது. தேர்தல் வந்தால் சந்திக்க வேண்டியது தானே. நானும்தான் அரசியல் செய்கிறேன். ஆனால் ஒருபோதும் நான் அதிமுகவிற்கு இடையூறாக இருந்தது கிடையாது. 18 இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் தற்போதைய முடிவு அவர்களுடைய முடிவல்ல. அவர்களை கிளப்பிவிட்ட முடிவு” என தெரிவித்தார்.