டிரெண்டிங்

அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?

அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?

webteam

அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து கடந்த 2 நாள்களாகவே ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக முதல்கட்டமாக 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இன்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முதல்வரும், துணை முதல்வரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. துணை முதல்வர்  பன்னீர்செல்வம் மட்டும் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பேசினார்.

அதேநேரத்தில், முதல்வர் இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியி முதல்வர் கலந்து கொள்ளாதது கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.