டிரெண்டிங்

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் முழு எலும்புக்கூடு கண்டுபிடிப்பு...

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் முழு எலும்புக்கூடு கண்டுபிடிப்பு...

kaleelrahman

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக குழந்தையின் எலும்பு கூடு முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ஆம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது. இந்தப்பணி இந்தமாத இறுதிவரை நடைபெறும் இந்த பணியில் 10 ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களும், இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அகழாய்வு பணியில் தற்போதுவரை 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் பிராமி எழுத்துக்களும், எலும்புகள் மற்றும் இரும்பு கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின் தொடர்ச்சியாக கால்வாய் செல்லும் பனங்காட்டு பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது.

அந்த அகழாய்வு பணியில், சுமார் 2அடி ஆழத்திற்கு தோண்டிய போது 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தையின் எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளும் போது இதன் காலம் தெரிய வரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்