டிரெண்டிங்

”நேரத்தை வீணடிக்காமல் வாழுங்கள்” - உலகைச் சுற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் நம்பிக்கை கதை!

”நேரத்தை வீணடிக்காமல் வாழுங்கள்” - உலகைச் சுற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் நம்பிக்கை கதை!

JananiGovindhan

கடினமான குறைபாட்டுடன் பிறந்த சார்லி ரூசே என்ற 25 வயது இளம்பெண் தற்போது உலகையே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

கனடா நாட்டைச் சேர்ந்த இந்த சார்லி ரூசேவிற்கு ஒரு கையும், பாதி கால்களுமே உள்ளன. இது முறையற்ற கருக்கலைப்பால் ஏற்பட்ட நிலை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் தன்னை சாதாரணமாக பிறந்த குழந்தை போன்றும், சாதாரண மனிதரை போன்றே நினைத்துக் கொள்வதாக சார்லி ரூசே கூறியிருக்கிறார்.

ஆனால் டீனேஜ் பருவத்தை அடையும் போது அவரால் தனது குறைபாடுகள் குறித்து நினைக்காமல் இருக்க முடியவில்லை என FEMAIL செய்தியிடம் கூறியிருக்கிறார். சார்லியின் அம்மாவிற்கு முறையாக கருக்கலைப்பு செய்யாததால் சிசுவை தாங்கும்படி பெற்றோரிடம் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து பேசியவர், "இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் கனடாவின் சிறிய நகரத்தில் வசித்து வருவதால் அதனை மேற்கொண்டு பரிசீலிக்க அவர்கள் விரும்பவில்லை.

டீனேஜ் பருவம் வருவதற்கு முன் தன்னுடைய நிலை என்னவாக இருக்கிறது என சார்லி அறிந்திருக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால் தற்போது தனது உடலை எண்ணி எந்த கவலையும் கொள்வதில்லை என்றும், தனது உடலமைப்பை வசதியாகவே கருதுவதாக தெரிவித்துள்ளார்.

“என் பெற்றோர் என்னை சாதாரண பள்ளிக்குதான் அனுப்பினார்கள். எனக்கு எல்லோருக்கும் இருப்பதை போல சாதாரண நண்பர்கலே இருந்தார்கள்.
ஆண்களுடன் டேட்டிங் மற்றும் ஃபேன்ஸிங் செய்வதில் எனக்கு ஆர்வம் வந்ததும் தான், நான் உண்மையில் என் இயலாமையை ஏற்றுக்கொண்டேன்." என்று அவர் கூறினார்.

"ஆண்கள் என்னை முத்தமிட முயலும் போது அவர்கள் கீழே குனிய வேண்டியிருந்தது, எனக்கு எப்போதாவது ஒரு ஆண் நண்பன் இருப்பான் என்று நான் உண்மையிலேயே நினைத்து பார்த்துக்கொள்வேன்?" எனவும் சார்லி குறிப்பிட்டார்.

ஆனால் சார்லி ரூசே தற்போது வெற்றிகரமான ரேடியோ ஜாக்கியாக இருந்து வருகிறார். இதன் மூலம் மெக்சிகோ, ஆஸ்திரேலியா, லண்டன் என பல நாடுகளுக்கும் சார்லி பயணம் செய்திருக்கிறார்.

நான் எங்கு சென்றாலும் அனைவராலும் விரும்பப்படும் நபராகவே இருக்கிறேன். எந்த பேதமும் இல்லாமல் உடனடியாக உதவுகிறார்கள். உங்கள் வாழ்க்கையை வாழுங்க. நேரத்தை வீணடித்துக் கொள்ளாதீர்கள் எனவும் பலருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக சார்லி ரூசே இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் தளத்தில் தன்னுடைய பயணங்கள் குறித்த ஆவணங்களை பதிவு செய்து வருகிறார்.