நாடாளுமன்ற விவாதத்தின் போது தான் தூங்கியதாக வெளியான தகவலுக்கு வீடியோ ஆதாரத்துடன் திமுக எம்பி செந்தில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காரசாரமான விவாதங்களுக்கு இடையே பல்வேறு முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரில், தருமபுரி மக்களவை தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் விவாதத்தின் போது அவையில் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் வகையில் போலியான படம் பரப்பப்பட்டு வருவதாக செந்தில்குமார் எம்பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட படம் தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.