டிரெண்டிங்

18 பேரும் பொய் கூறியதால் தகுதி நீக்கம்: சபாநாயகர் தனபால் விளக்கம்

18 பேரும் பொய் கூறியதால் தகுதி நீக்கம்: சபாநாயகர் தனபால் விளக்கம்

webteam

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் விளக்க அறிக்கையில் பொய் தகவல் கூறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் 18 இடங்களும் காலியாக உள்ளது என்றும் சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக தனபால் விளக்கமளித்துள்ளார்.

அதில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஒரு கருவியாக தாம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கத்தின்போது ஜக்கையன் கூறியதாகவும், அவரது விளக்கத்தை ஏற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 18 எம்.எல்.ஏக்களும் புதுச்சேரியில் தங்கிவிட்டு கட்சி, நண்பர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் எனக் கூறியதாகவும், பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தந்தது பிடிக்காததாலேயே 18 பேரும் பொய் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டவே 18 பேரும் ஊடகங்களில் தவறான தகவல் பரப்பியதாகவும், அத்துடன் முதலமைச்சர் ஊழல் புரிந்ததாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் 18 பேரும் குற்றம் சாட்டியிருந்தனர். இதுபோன்று பல பொய் தகவல்களை விளக்க அறிக்கையில் கூறியதால் தான் 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தனபால் தெரிவித்துள்ளார்.