டிரெண்டிங்

தனக்கு ஆதரவாக இருந்த ‘அடுத்த முதல்வர்’ போஸ்டரை கிழிக்க சொன்ன ஓபிஎஸ்?

தனக்கு ஆதரவாக இருந்த ‘அடுத்த முதல்வர்’ போஸ்டரை கிழிக்க சொன்ன ஓபிஎஸ்?

webteam

தனக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட ‘அடுத்த முதல்வர்’ போஸ்டரை துணை முதல்வர் பன்னீர்செல்வம் கிழிக்க சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் யார் அடுத்த முதல்வர் என்பது குறித்த சர்ச்சை நீடித்து வருகிறது. அமைச்சர்கள் தங்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் கட்சி அறிவிக்கும் எனக்கூறி முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அடுத்த முதல்வராக, 2021 நிரந்தர முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தான் வருவார் என்று தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் இல்லத்தில் பத்திற்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்டோர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்திய நிலையில் அங்கிருந்து கிளம்பிய அமைச்சர்கள் முதலமைச்சர் வீட்டில் ஆலோசனை நடத்தினர். இதனிடையே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் வீட்டின் அருகே ஒட்டப்பட்டிருந்த ஓபிஎஸ்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரை பன்னீர்செல்வம் கிழிக்க சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது