டிரெண்டிங்

”டேஸ்ட்டா இருக்கு.. நான் சாப்ட்டுக்குறேன்” - மோசம் செய்த டெலிவெரி பாய்.. கடுப்பான கஸ்டமர்!

”டேஸ்ட்டா இருக்கு.. நான் சாப்ட்டுக்குறேன்” - மோசம் செய்த டெலிவெரி பாய்.. கடுப்பான கஸ்டமர்!

JananiGovindhan

பிடித்தமான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அது டெலிவரியாகும் வரையில் கண்கொத்தி பாம்பு போல காத்திருக்கும் நிகழ்வு பலருக்கும் நடந்திருக்கும். ஆனால் அத்தனை நேரம் காத்திருந்தும் நீங்கள் ஆர்டர் செய்த உணவு உங்களுக்கு கிட்டவில்லை என்றால் எப்படி இருக்கும்? அப்படியான சூழலைதான் பிரிட்டனை சேர்ந்த ட்விட்டர் பயனர் அனுபவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தில் அவர் ஆர்டர் செய்த உணவு வராமல் போனதோடு, அது குறித்து டெலிவரி பாய் மெசேஜ் செய்ததுதான் அவரை இன்னும் கடுப்படையச் செய்திருக்கிறது என்பது அவர் பகிர்ந்த ட்வீட் மூலம் அறியலாம்.

அதன்படி, Bags என்ற ட்விட்டர் பக்கத்தில், அவருக்கும் இங்கிலாந்தின் பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான deliveroo ஊழியருக்கும் இடையே நடந்த மெசேஜ் உரையாடலை பகிர்ந்திருக்கிறார். அதில், sorry டெலிவரி பாய் மெசேஜ் அனுப்ப அதற்கு ஏன் என்ன ஆச்சு என வாடிக்கையாளர் கேட்க, “நீங்கள் ஆர்டர் செய்த உணவு மிகவும் ருசியாக இருந்தது. அதை நான் சாப்பிடுகிறேன். deliveroo நிறுவனத்திடம் புகாரளித்துக்கொள்ளுங்கள்” என பதிலளித்திருக்கிறார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துப்போன அந்த பயனர், “பயங்கரமான ஆளாக இருக்கிறாய்” என பதிலளிக்க அதற்கு அந்த டெலிவரி பாய் “அதைப் பற்றி எனக்கு கவலையில்லை” என கூறியிருக்கிறார்.

இந்த கான்வர்சேஷனை ட்விட்டர் பகிர்ந்த அவர், “டெலிவரூ ஊழியர் இப்படி முரட்டுத்தனமாக இருந்திருக்கிறார்” எனக் கேப்ஷனிட அந்த ட்வீட் பல்லாயிரக் கணக்கான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் பலரும் டெலிவரூ நிறுவன ஊழியர்களாலும் அந்த நிறுவனத்தாலும் தங்களுக்கு நேர்ந்த அபத்தமான சூழ்நிலைகள் குறித்தும் பதிவிட்டிருக்கிறார்கள்.

அதில், மார்வின் என்ற பயனர் ஒருவர், “டெலிவரூவிடம் இருந்து எதாவது பதில் கிடைக்கும் என தயவுசெய்து எதிர்ப்பார்க்கவே வேண்டாம். நான் அந்த அப்ளிகேஷனையே நீக்கிவிட்டேன்” என பதிவிட்டிருக்கிறார்.