டிரெண்டிங்

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: வங்கதேச அமைச்சரவை ஒப்புதல்!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: வங்கதேச அமைச்சரவை ஒப்புதல்!

sharpana

பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் முறை வங்கதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றும், இந்தியாவின் அருகே அமைந்திருக்கும் நாடான வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி செய்து வருகிறார். இவர், அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது  குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, இந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை கலிதா ஜியாவைச் சேரும்.

கலிதா ஜியா

பெண்  தலைவர்கள் ஆட்சி செய்ததாலும்; செய்வதாலும் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்படும் பெண்களின் துயரமும் வலியும் அவர்களுக்குத் புரியும். அதனாலேயே, பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை, அந்நாட்டின் சட்ட அமைச்சர் அன்சுல் ஹக் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா

இதுகுறித்து அவர் பேசும்போது, “பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகப்பட்சத் தண்டனை மரண தண்டனைதான். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் நிறைவேற்றியப் பின்னர் அதிபர் அப்துல் ஹமீத், தற்போது பாலியல் வன்புணர்வ குற்றங்களில் ஆயுள் தண்டனை பெறுவோரை மரண தண்டனை பெறுவோராக அறிவித்து விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், வங்கதேசத்தில் பெண்களுக்கெதிராக தொடர்ச்சியாக நடந்த பாலியல் வன்புண்ர்வு குற்றங்களே, இச்சட்டத்தை கொண்டவரக் காரணம் என்று கூறுப்படுகிறது.