டிரெண்டிங்

``Blood குருப்ல கூட நீ முதல்ல இல்ல” - மகளை ரோஸ்ட் செய்த அப்பாவின் தரமான செய்கை! #Viral

``Blood குருப்ல கூட நீ முதல்ல இல்ல” - மகளை ரோஸ்ட் செய்த அப்பாவின் தரமான செய்கை! #Viral

JananiGovindhan

தன்னுடைய பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசுவதில் இந்திய பெற்றோர்களை அசைக்க எவர்களாலும் முடியாது என தொடர்ந்து பேசப்பட்டு வரும். அது தேர்வில் எடுத்த மார்க் முதல் சாப்பிடுவது வரை அனைத்தையும் ஒப்பிடுவதில் கெட்டிக்காரர்களாகவே இருப்பர்.

இப்படி இருக்கையில், அப்பா ஒருவர் தன் மகளின் ரத்த மாதிரி டெஸ்ட் ரிப்போர்ட் குறித்து வாட்ஸ் அப்பில் சாட் செய்தது குறித்த ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

அதில், அந்த அப்பா தனது மகளின் ரத்த வகை ரிப்போர்ட்டை அனுப்பி, “உன்னுடைய மற்றும் உன் தோழியின் ரத்த வகை ரிப்போர்ட் வாங்கிவிட்டேன்" என மெசேஜ் அனுப்ப, அதற்கு அந்த மகள் “ஓகே” என பதில் அனுப்பியிருக்கிறார்.

அதன் பிறகு சிறிதும் தாமதிக்காமல், “ரத்த வகை ரிப்போர்ட்டில் கூட உன்னுடைய தோழி A+ பெற்றிருக்கிறார். ஆனால் உனக்கு B- தான் வந்திருக்கிறது” என அந்த அப்பா வேண்டுமென்றே கிண்டல் செய்யும் வகையில் மகளுக்கு மெசேஜ் அனுப்ப, அப்பாவின் மெசேஜ்ஜை பார்த்த அந்த மகள் என்ன சொல்வதென்று தெரியாமல் “அப்பா ப்ளீஸ்” என அழுகும் ஸ்மைலியை அனுப்பியிருக்கிறார்.

இந்த வாட்ஸ் அப் சாட் ஸ்க்ரீன் ஷாட்டை Momo என்ற பயனர் ட்விட்டரில் ஷேர் செய்து, உங்க அப்பாவை தவிர வேறு யாராலும் உங்களை ரோஸ்ட் செய்ய முடியாது என கேப்ஷன் இட்டிருக்கிறார். இந்த பதிவைக் கண்ட பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்கள் அதற்கு லைக்கிட்டதோடு, “அப்பாக்களின் நகைச்சுவை உணர்வுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை” என்றும், “தன் பிள்ளைகளை கிண்டல் செய்வதில் இந்தியாவைச் சேர்ந்த அப்பாக்கள் எப்போதும் கெட்டிக்காரர்கள்தான்” என்றும் பல கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.