டிரெண்டிங்

கட்சி தலைமையின் முடிவை விமர்சிப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல - கே.எஸ்.அழகிரி

கட்சி தலைமையின் முடிவை விமர்சிப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல - கே.எஸ்.அழகிரி

webteam

கட்சித் தலைமை எடுத்த முடிவை விமர்சிப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்று காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவரான கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 9 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்தது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இழுபறி நீடித்து வந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் பெயரை சிவகங்கை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. 

கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு சுதர்சன நாச்சியப்பன் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார். , “சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சி மட்டுமில்லாமல் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவரான கே.எஸ். அழகிரி கட்சித் தலைமை எடுத்த முடிவை விமர்சிப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், வேட்பாளருக்கு சுதர்சன் நாச்சியப்பன் தகுதியானவர் தான் என்றும் ஆனால் கட்சித் தலைமை முடிவை ஏற்பதே சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பனின்  விமர்சனம் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரானதா அல்லது தலைமைக்கு எதிரானதா என்பதை நாச்சியப்பன் யோசிக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தொகுதிகள் 9 மட்டுமே உள்ளன'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.