டிரெண்டிங்

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை விளம்பரம் செய்க - தேர்தல் ஆணையம் உத்தரவு

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை விளம்பரம் செய்க - தேர்தல் ஆணையம் உத்தரவு

jagadeesh

குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை செய்திதாள்களில் விளம்பரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்துதல் குறித்து அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2020-இல் வெளியிடப்பட்ட விரிவான விதிமுறைகளை தொடர்ந்து இப்போது நடைபெற இருக்கும் 5 மாநிலத் தேர்தலிலும் இது அமலுக்கு வந்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை நாளிதழ், ஊடகங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் மூன்று முறை வெளியிட வேண்டும்.

இது குறித்து 5 மாநில தேர்தல் ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.