டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: "இன்னும் 100 பேருக்கு உணவளிக்க ஆசை" - உதவிக்கரம் கோரும் குரல்

துளிர்க்கும் நம்பிக்கை: "இன்னும் 100 பேருக்கு உணவளிக்க ஆசை" - உதவிக்கரம் கோரும் குரல்

நிவேதா ஜெகராஜா

"நானொரு பாதிரியார். எங்கள் பகுதியினரோடு இணைந்து, எங்கள் பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வயதானவர்களுக்கு உணவளித்து வருகிறேன். எங்கள் சேவையை விரிவாக்க விருப்பம் உள்ளவர்கள், முன்வர வேண்டும்" - அருள், வந்தவாசி

"நான் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தேன். எனக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது வீட்டு வேலைக்கும் செல்ல முடியாது நிலை உள்ளது. வீட்டுத்தேவைக்கு, உணவு, மளிகைப் பொருட்கள் தேவை" - லதா

"எங்கள் குடும்பம், கொரோனாவால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பம் வருமானத்தை முழுவதுமாக இழந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க பணம் தேவை. எங்கள் வீட்டில் ஒருவருக்கு சர்க்கை நோய் இருக்கிறது. அவருக்கு இன்சுலின் மருந்து வாங்க, பண உதவி தேவைப்படுகிறது" - மாரியம்மாள், கோயம்பத்தூர்

"நான் நாள்தோறும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கி வருகிறேன். இன்னும் பலருக்கும் உதவ நினைக்கிறோம். அதற்கு உணவு வழங்குவதற்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது" - மனோஜ், கும்பகோணம்

"வருமானம் இல்லாததால் எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மளிகை தேவைப்படுகிறது. ஏற்கெனவே 6000 கடன் பெற்றுள்ளதால், பண உதவியும் தேவைப்படுகிறது" - ராஜேந்திரன், புதுக்கோட்டை

"நானொரு தினக்கூலி. எங்கள் வீட்டில் 7 பேர் இருக்கின்றனர். ஏற்கெனவே பொருலாதார ரீதியாக சிரமப்பட்ட எங்களுக்கு, தற்போது மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, மளிகைப் பொருட்கள் தேவைப்படுகிறது" - சரத்பாபு, திருவள்ளூர்

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'