டிரெண்டிங்

கொரோனா கால மகத்துவர்: 1600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய சிலைமான் ஊராட்சிமன்றத் தலைவர்

கொரோனா கால மகத்துவர்: 1600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய சிலைமான் ஊராட்சிமன்றத் தலைவர்

kaleelrahman

மதுரை அருகே சிலைமானில் தனது ஊராட்சிக்குட்பட்ட 1600 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை அருகே சிலைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 1600 குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கூலி தொழில் செய்து வரும் நிலையில், தற்போது கொரோனோ ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வருகின்றனர். அன்றாட அத்தியாவசிய தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், கிராம மக்களுக்கு சிலைமான் ஊராட்சி மன்றத் தலைவர் சாஹல் ஹமீது தனது சொந்த முயற்சியில் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் 1000 ரூபாய் நிவாரண உதவியும் வழங்கினர். தனது ஊராட்சிக்குட்பட்ட 1600 குடும்பங்களுக்கும் எந்தவித பாகுபாடும் காட்டாமல் தனது சொந்த செலவில் கொரோனோ நிவாரண உதவி வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.