டிரெண்டிங்

கொரோனா கால மகத்துவர்: பழங்குடி கிராமத்தில் கல்விச்சுடர் ஏற்றும் சந்தியா

கொரோனா கால மகத்துவர்: பழங்குடி கிராமத்தில் கல்விச்சுடர் ஏற்றும் சந்தியா

kaleelrahman

கல்விச்சுடர் ஏற்றப்படும் இடங்களில் எதிர்காலத்திற்கான பாதை பிரகாசமாகும். இந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் படிக்க முடியாத மாணவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் இளம் பெண் ஒருவர். யார் இவர்? - விரிவாக பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழங்குடி கிராமமான சின்னாம்பதியில் 55 வீடுகள் உள்ளன. அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் இக்கிராமத்தை சேர்ந்த 35 குழந்தைகள் 5 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில், மலைக்கிராமம் என்பதால் இணையதள தொடர்புகள் கிடைப்பது சிரமம். இதனால் பள்ளிக்குழந்தைகள் படிக்காமல் இருப்பதை பார்த்த சந்தியா, அவர்களுக்கு நாள்தோறும் பாடம் எடுத்து வருகிறார்.

தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா காலம் என்பதால் தற்போது வீட்டில் உள்ளார். இந்த விடுமுறையை, தனது கிராமத்து பள்ளிக் குழந்தைகளுக்காக பயனுள்ளதாக மாற்றியிருக்கிறார் இந்த இளம் பெண்.
அரசு சார்பில் சின்னாம்பதி கிராம மக்களுக்கு தற்போது வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் நிலையில் அந்த கட்டடம் ஒன்றில் வைத்து பாடம் சொல்லித்தருகிறார் சந்தியா. கிராமத்தின் முதல் பட்டதாரியான சந்தியா, தனது வழியில் மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்று கைக்கொடுத்து கற்றுத்தருவது கிராம மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.