டிரெண்டிங்

கொரோனா கால மகத்துவர்: 1400 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய சிஐஐ அறக்கட்டளை

kaleelrahman

பழவேற்காட்டில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 1400 பழங்குடியின மக்களுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பு அறக்கட்டளை ஏற்பாட்டில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பழங்குடி கிராம மக்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. கோவிட் -19 காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் சி.எல்.பி இந்தியா பிரைவேட் லிமிடெட் அரசாங்கத்துடன் இணைந்து நாடு முழுவதும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பழவேற்காடு பகுதியில் வசிக்கும் 1400 பழங்குடியின மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவைகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக 10 கிலோ அரிசி, 10 கிலோ மளிகை சாமான்கள், கபசுர குடிநீர், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிவாரணப் பொருட்களை பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் பழங்குடி மக்களுக்கு சமூக இடைவெளியுடன் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளன நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், மீனவ கிராம நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.