டிரெண்டிங்

எடியூரப்பா பதவியேற்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு

எடியூரப்பா பதவியேற்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு

webteam

கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

கர்நாடகாவில் முதலமைச்சராக எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி அமைச்சர்கள் இல்லாமல், எடியூரப்பா மட்டும் நாளை பதவியேற்கிறார். மற்ற அமைச்சர்கள் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பதவியேற்கவுள்ளார்கள். பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த 15 நாட்களில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிக் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த  முறையீட்டை இரவே அவசர வழக்காக விசாரிக்க பதிவாளரிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதற்காக தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளரிடம், காங்கிரஸ் வழக்கறிஞர் அபினேஷ் வலியுறுத்தியுள்ளார். காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்பார் என்பதால், அதற்கு முன்னதாக மனுவை விசாரிக்கவும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் முதல்வர் பதவியேற்ற பின்னர் வழக்கு தொடர்ந்தால், பல சட்டசிக்கல்கள் ஏற்படும் என்றும், காங்கிரஸ் ஆதரவுடன் பெரும்பான்மையில் இருக்கும் மஜதவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.