டிரெண்டிங்

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், 1 கோடி பேருக்கு வேலை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், 1 கோடி பேருக்கு வேலை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

rajakannan

கர்நாடகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி ‌தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் 225 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். கர்நாடக மக்களின் குரலாக இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். பிரதமர் நரேந்திர மோடி, தனது மனதில் உள்ளவற்றை மன் கி பாத் மூலம் சொல்கிறார் என்றால், இந்தத் தேர்தல் அறிக்கை கர்நாடக மக்களின் மனதின் குரலாக ஒலிக்கிறது என்று அவர் கூறினார். மேலும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார். 

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

  • கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும்
  • ஒவ்வொரு ஆண்டும் 15-20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
  • 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவசக் கல்வி(தற்போது 1-8 வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது)
  • கர்நாடக பொருளாதாரத்தில் ஐ.டி துறையின் பங்களிப்பு 60 பில்லியன் டாலரில் இருந்து 300 பில்லியன் டாலராக உயர்த்தப்படும்
  • காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, அதில் திருநங்கைகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு