‘காங்கிரஸ் கட்சிக்கு 24x7 இயங்கக் கூடிய முழுநேர தலைவர் வேண்டும்’ என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபில்.
கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பிய 23 பேரில் கபில் சிபலும் ஒருவர்.
கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக தொடருவார் என தெரிவித்திருந்த சூழலில் கபில் சிபில் இதை தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அனுப்பிய கடிதம் அனைவரது பார்வைக்கும் கிடைத்தால் அதில் வலியுறுத்தப்பட்டுள்ள செய்தியை நாடறியும். அதில் நாங்கள் காந்தி குடும்பம் உட்பட யாரையும் தாழ்த்தி மதிப்பிடவில்லை. இதுவரையில் காங்கிரஸ் தலைவரின் பணியை நாங்கள் பாராட்டியுள்ளோம்.
கட்சிக்கு புத்தாக்கம் கொடுப்பது எங்கள் நோக்கம். அதில் நாங்கள் பங்கெடுக்க விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியின் மரபு ரீதியான உறுதிப்பாடாகும். அதோடு இந்தியக் குடியரசின் அஸ்திவாரங்களை அழித்த ஒரு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் பக்கமாக அனைவரும் திரண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எடுத்த முடிவு இது.
2014 மற்றும் 2019 தேர்தலில் தோல்வியை தழுவியது காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே பின்னடைவு தான்.
காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் துரோகி என்ற சொல்லை வெளிப்படையாக பயன்படுத்தினார்.
கட்சியின் அடிப்படை அரசியலமைப்பை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
நாங்கள் கட்சியின் கள வீரர்கள். எங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து வைத்து கொள்ளும் அளவுக்கு அனுபவமுள்ளவர்கள். நாங்கள் சொல்வதை அனைவரும் கேட்பார்கள் என நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : http://www.puthiyathalaimurai.com/newsview/78402/Rahul-Gandhi-said-Those-who-wrote-the-letter-against-Sonia-Gandhi-were-associated-with-the-BJP