எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் சரி வட இந்தியாவிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொது மொழி குறித்த கேள்விக்கு ரஜினியின் கருத்தில் இருத்து மாறுபட்டுள்ளார், அவர் கூறுகையில் " என் தாய்மொழி மீது கை வைக்காத வரை அவர்கள் கருத்துக்கள் ஏற்கப்படும். ஆனால் தாய்மொழி மீது கைவைத்தால் மன்னிக்கப்படாது. பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. விபத்தின் மூலம் கிடைத்த மொழி ஆங்கிலமாக இருந்தாலும் நன்மையாக அமைந்தது. அடிமையாக இருந்த போதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்து கொண்டோம் என்று தெரிவித்த அவர்.
எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வுக்கு மூன்று ஆண்டு விலக்கு கொடுத்ததன் மூலம் மூன்று ஆண்டினை கடத்துவார்கள் எனதோன்றுகிறது. கல்வி துறையில் சீரிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்