டிரெண்டிங்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

webteam

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

முன்னதாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அவர்கள் விசாரணை நடத்தி விபரங்களை அரசிடம் சமர்ப்பிப்பர். அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்’ என தெரிவித்தார்.  

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இதனிடையே, துணைப்பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இதுவரை முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் எந்த பதிலும் அளிக்காத நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.