டிரெண்டிங்

கோவை ஆட்சியர், காவல் ஆணையர் இடமாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு

கோவை ஆட்சியர், காவல் ஆணையர் இடமாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு

Sinekadhara

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திமுக சார்பில் ஏற்கெனவே இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் உள்ளிட்ட பல அதிகாரிகள் மீது புகார் கொடுக்கப்பட்டது.

தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், ராஜாமணியை தற்போது தேர்தல் அதிகாரியாக குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், அவரை இடமாற்றம் செய்துள்ளது. காவல் ஆணையர் சுமித் சரணையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில், இருவரையும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் கோவை ஆட்சியராக நாகராஜன், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.