டிரெண்டிங்

எம் சாண்டை பயன்படுத்த முதல்வர் பரிந்துரை

எம் சாண்டை பயன்படுத்த முதல்வர் பரிந்துரை

Rasus

எம் சாண்டை பயன்படுத்த மக்கள் தயாராகிக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி பேரவையில் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறினார். இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மணல் விற்பனை தற்போது இணையதளம் மற்றும் செயலி மூலமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ 80% மணல் தேவைகள் கரூர் மற்றும் திருச்சி மணல் குவாரிகள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மணல் குவாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. புதிய மணல் குவாரிகள் தொடங்க அரசு நடவடிக்கைகள் எடுத்தபோது அதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மணலுக்கு மாற்றாக எம் சாண்டு விற்பனைக்கு அரசு ஊக்கம் அளித்துள்ளது. அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மணல் தட்டுப்பாட்டு காரணம் நிலுவையில் உள்ள வழக்கு தான். வழக்கு விசாரணை வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. அதில் சாதமான முடிவு வரும் என நம்புகிறேன் ” என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் மணல் அளவு குறைவாக உள்ளது எனவும், எனவே மக்கள் எம் சாண்டை பயன்படுத்த தயாராகி கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.