டிரெண்டிங்

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

Rasus

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களுக்கு பூங்கொத்துடன் கூடிய கடிதத்தை அனுப்பியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களின் சார்பில் இந்த வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு உழைப்பதற்கான ஆரோக்கியத்தை வழங்க இறைவனை பிரார்த்திப்பதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கும் அவர் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.