டிரெண்டிங்

"தந்தையே செய்யாதபோது மகன் என்ன செய்யப் போகிறார்?" - முதலமைச்சர் பழனிசாமி

"தந்தையே செய்யாதபோது மகன் என்ன செய்யப் போகிறார்?" - முதலமைச்சர் பழனிசாமி

webteam

பலமுறை மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியின் வளர்ச்சிக்கு ஒன்‌றுமே செய்யாத நிலையில், அவரது மகன் என்ன செய்யப் போகிறார் என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்ட மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவையும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாகராஜனையும் ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். முதலில் அரண்மனைவாசல் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், நிதியமைச்சராக ஏற்கனவே இருந்த ப.சிதம்பரம் தொகுதி வளர்ச்சிக்கு‌ ஒன்றும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியதை சுட்டிக்காட்டி, சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜாவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இளையான்குடியில் பரப்புரை மேற்கொண்டபிறகு, மானாமதுரையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக ‌சார்பில் போட்டியிடும் நாகராஜனுக்கு வாக்களியுங்கள் எனக் கூறி வாக்கு சே‌கரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது, நாடு வளம்பெறவும், மக்கள் பாதுகாப்புடனும் இருக்க‌ வேண்டுமென்றால் மோடி மீண்டும் பிரதமராக வாக்களியுங்கள் என மக்களிடம் வாக்கு‌சேகரித்தார்.