சந்திராயன் 3 PT
டிரெண்டிங்

தொடங்கியது சந்திரயான் 3 கவுண்டவுன்.. கடைசி நேரத்தில் விண்கலத்தில் மேற்கொள்ளும் வேலைகள் என்னென்ன?

PT WEB

சந்திரயான்-3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் தொடங்கியது. நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் திட்டத்தின்கீழ், சந்திரயான்-3 விண்கலத்தை 615 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கி உள்ளது. இந்த விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து, நாளை பிற்பகல் 2.35 மணிக்கு மார்க்-3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அதற்கான 25 மணி 30 நிமிடங்களுக்கான கவுண்டன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், கடைசி நேரத்தில் எந்தெந்த வேலைகள் சந்திரயானில் மேற்கொள்ளப்படும்? என்ற கேள்விக்கு இஸ்ரோவின் ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி வெங்கட்ராமன் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்துள்ள பதில்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.