டிரெண்டிங்

காவிரி விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Rasus

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி உள்ளிட்ட சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாணைக்கு வரவுள்ளது. அன்றைய விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வழக்கறிஞர்களின் வாதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் கோரியும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள, மனுக்களை எதிர்க்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோச‌னைக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே தலைமையிலான 5 வழக்கறிஞர்கள், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணும் கலந்துகொண்டார். மேலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்‌சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.