டிரெண்டிங்

ஜூலை 2-ல் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம்: முதலமைச்சர் ஆலோசனை

Rasus

காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் திங்கட்கிழமை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்‌தக் கூட்டத்தில் தமிழக தரப்பு வாதங்களை முன் வைப்பது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். அரை‌மணிநேரம் நீடித்த கூட்டத்தில், தமிழக பொது பணித்துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கே பிரபாகரன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.

டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணயத்தின் கூட்டத்தில் பங்கேற்க உள்ள இவர்கள், அங்கு தமிழகத்தரப்பை எடுத்துரைக்‌க உள்ளனர். உச்சநீதிமன்ற இறுதி உத்தரவின்படி, அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணை‌த்தின் முதல் கூட்டம் வரும் திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.