டிரெண்டிங்

ஜெ சிகிச்சை வீடியோ வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு

ஜெ சிகிச்சை வீடியோ வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு

webteam

ஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை, டிடிவி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மீது அவதூறு பரபரப்படுவதாகவும், அந்த அவதூறை தவிர்க்கவே வீடியோவை வெளியிட்டதாகவும் வெற்றிவெல் தெரிவித்தார். தினகரனுக்கு தெரியாமல் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையப்படுத்தி உள்நோக்கத்துடன் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். விசாரணை ஆணையத்திடம் வீடியோவை அளிக்காதது ஏன் ‌எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் வெற்றிவேல் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் வெற்றிவேல் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2 பிரிவுகளின்கீழ் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.