டிரெண்டிங்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Rasus

சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீதிபதி ரவிச்சந்திரபாபு இவ்வழக்கை விசாரிக்க உள்ளார். பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கும் இதோடு சேர்த்து விசாரிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே இவ்வழக்குகள் கடந்த மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை இல்லை என்றும் மறு உத்தரவு வரும் வரை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவும் தடை விதித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர், பேரவைச் செயலாளர், அரசு கொறடா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு அதாவது இன்றைக்கு ஒத்திவைத்தார்.