கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் முகக்கவசம் அணியாமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்களை நிரந்தரமாகவோ, தேர்தல் முடியும் வரையோ தடை விதிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விக்ரம்சிங் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஆயிரக்கணக்கானோருக்கு பரவும் அபாயம் உள்ளது.
ஆனால் பரப்புரையின்போது வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது தனிமனிதனின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது. முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, முகக்கவசம் அணியாமல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்களை நிரந்தரமாகவோ, தேர்தல் முடியும் வரையோ பரப்புரை செய்ய தடை விதிக்க தேர்தல் ஆணையம், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.