டிரெண்டிங்

நாளையுடன் ஓயும் பரப்புரை: வரும் 27 ஆம் தேதி அசாம்,மேற்குவங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு

நாளையுடன் ஓயும் பரப்புரை: வரும் 27 ஆம் தேதி அசாம்,மேற்குவங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு

Veeramani

மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் வாக்குப்பதிவுக்கான பரப்புரை நாளையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக வரும் 27ஆம் தேதி 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை நாளையுடன் நிறைவு பெறுகிறது. இங்கு ஆளும் திரிணமூல், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. காலில் அடிபட்ட நிலையிலும் முதல்வர் மம்தா பானர்ஜி சூறாவளி பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

மேற்குவங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைவர்களும் இடைவிடாது பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கத்தை தொடர்ந்து அசாமிலும் வரும் 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. சர்பானந்தா சோனாவால், ரிபுன் போரா உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா மற்றும் எதிர்க்கட்சியாக இருக்க கூடிய காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி மோதல் நிலவுகிறது.