டிரெண்டிங்

காங்கிரஸ் கூட்டணி கனவுக்கு செக் வைத்த மாயாவதி

காங்கிரஸ் கூட்டணி கனவுக்கு செக் வைத்த மாயாவதி

webteam

பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக மாயாவதி, முலாயம் சிங், மமதா, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, சரத்பவார் உள்ளிட்ட சிலரை தங்கள் கூட்டணியில் இணைத்து தேர்தலை எதிர்கொள்வது காங்கிரஸ் கட்சியின் திட்டமாக இருக்கிறது. இதற்கான நடவடிக்கை பலன் தந்து வந்த சூழலில், விரைவில் நடைபெற உள்ள சில மாநில தேர்தல்களில் இதே பார்முலாவை பின்பற்றி கூட்டணி வைக்கவும் திட்டமிடப்பட்டது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி “ காங்கிரஸ் கட்சியோடு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி இல்லை , திக் விஜய் சிங் பாஜ்கவின் ஏஜெண்டாக செயல்படுகிறார், பகுஜன் சமாஜ் கட்சியை அழித்து விட காங்கிரஸ் துடிக்கிறது” என தெரிவித்துள்ளார். 

மாயவதி குறிப்பிடும் போது “ சோனியா, ராகுலுக்கு எங்களோடு கூட்டணியில் இருக்க வேண்டுமென ஆசை, ஆனால் மற்ற தலைவர்களுக்கு அது இல்லை, காங்கிரஸ் கட்சியின் ஊழல் ஆட்சி மக்கள் மனதில் இன்னும் இருக்கிறது, பாஜக எப்போதும் விவசாயிகளுக்கு எதிரான அரசாக இருக்கிறது, மதவாதத்தை பரப்புகிறது என்பதால் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்புகிறோம்” என்றார். 

மாயாவதியின் இந்த திடீர் அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் 2019 தேர்தல் கூட்டணி கனவை சற்று அசைத்து பார்க்க வாய்ப்பிருக்கிறது.