டிரெண்டிங்

வெறும் அண்ணன் தம்பி சண்டைதான்: திண்டுக்கல் சீனிவாசன்

வெறும் அண்ணன் தம்பி சண்டைதான்: திண்டுக்கல் சீனிவாசன்

Rasus

அதிமுகவில் நிலவுவது வெறும் அண்ணன், தம்பி சண்டைதான் என தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யானைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் வனத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அப்போது அதிமுகவில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இது அண்ணன் தம்பி சண்டைதான். எல்லாம் விரைவில் சரியாகி விடும். நல்ல சூழ்நிலை உருவாகி ஆட்சி தொடர்ந்து 4 வருடமும் அதற்கு பின்பும் நீடிக்கிற சூழ்நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது. தவறாக பேசாமல் நாணயமாக பேசினால் நன்றாக இருக்கும். ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவது சரியல்ல" என்றார்.