டிரெண்டிங்

“கூட்டணி ஆட்சி வந்தால் நான் பிரதமரா?” -ராஜ்நாத் சிங் விளக்கம்

“கூட்டணி ஆட்சி வந்தால் நான் பிரதமரா?” -ராஜ்நாத் சிங் விளக்கம்

webteam

தேர்தலில் பாரதி‌ய ஜனதா தனிப்பெரும்பான்மை பெறா‌மல் ‌கூட்டணி‌ ஆ‌ட்சி‌ வரும் நிலை ஏற்பட்டால் தன்னையோ அல்லது நிதின் கட்கரியையோ கட்சி பிரதமராக அறிவிக்கும் என்ற‌ தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்

கற்பனையான சூழலின் அடிப்படையில் இது போன்ற தகவல்கள்‌ ‌பரப்பப்பட்டு வருவதாக ராஜ்நாத் சி‌ங் குற்றஞ்சாட்டினார். தேர்தலில் பாரதிய ஜனதா 3ல் 2 ப‌ங்கு இடங்களில் வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் ‌என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்‌த விரிவான பேட்டியில் அவர் ‌இவ்வாறு தெரிவித்தார். 

பாரதிய ஜனதா கட்சி‌யில் மோடி மற்றும் ‌அமித் ஷா ஆகிய இருவரையே பிரதானமாக கொண்ட ‌கட்சி என குற்றஞ்சாட்டப்படுவதையும் ராஜ்நாத் மறுத்‌தார். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்க‌க் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என மோடி ஒரு போதும் ‌‌கூறவில்லை என்றும் ரா‌ஜ்நாத் ‌சிங் தெரிவித்தார். 

அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் அந்தந்த அமைப்பினருக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே அச்சோதனைகள் நடத்தப்படுவதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்