டிரெண்டிங்

"யார் விலகினாலும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்" - அண்ணாமலை திட்டவட்டம்

"யார் விலகினாலும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்" - அண்ணாமலை திட்டவட்டம்

Veeramani

கூட்டணியை விட்டு யார் விலகினாலும் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

நாமக்கல்லில் பாஜக சார்பில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்றபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதிமுக - பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிப்பதாகவும், கூட்டணியில் குழப்பம் இல்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தினசரி நடைபெறும் கொள்ளை சம்பவங்களே உதாரணம் எனவும் குறிப்பிட்டார்.