டிரெண்டிங்

இட்லி, தோசைக்கு இதுதான் பெயரா? - அமெரிக்க ஓட்டல் மெனுவால் வாயடைத்துப்போன நெட்டிசன்ஸ்!

இட்லி, தோசைக்கு இதுதான் பெயரா? - அமெரிக்க ஓட்டல் மெனுவால் வாயடைத்துப்போன நெட்டிசன்ஸ்!

JananiGovindhan

விசித்திரமான, வித்தியாசமான பதிவுகளுக்கு சமூக வலைதளங்களில் பஞ்சமே இருக்காது. தினந்தோறும் ஏதேனும் சுவாரஸ்யமான பதிவுகள் வைரலாவதோடு அதன் மூலம் பற்பல தகவல்களும் தெரிந்துக்கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த வகையில், இட்லி வடை பற்றி வைரலாகியிருக்கும் சம்பவம் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

இட்லி, தோசை, வடை எல்லாம் நம்ம ஊரின் ஸ்பெஷலாக இருந்தாலும், வெளிநாடுகளில் அவ்வளவு எளிதாக கிட்டிடாது. எங்காவது ஒரு இடத்தில்தான் கிடைக்கும். அதுபோல, அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் தென்னிந்திய உணவுகள் விற்கப்படுகின்றன.

இதில் என்ன வைரலாவதற்கு இருக்கு என கேட்பது புரிகிறது. அந்த உணவுகளுக்கு அவர்கள் வைத்த ஆங்கில பெயர்கள்தான் ட்விட்டரை நிரப்பியியிருக்கின்றன.

இட்லி, தோசை மற்றும் வடை போன்ற முக்கிய உணவுகளை விவரிக்க அந்த அமெரிக்க உணவக மெனுவில் பயன்படுத்தப்படும் பெயர்கள் உங்களை ஆச்சர்யப்படவும், பயமுறுத்தவும் கூட செய்யலாம்.

அதன்படி, இட்லிக்கு Rice cake delight, சாம்பார் வடைக்கு Doughnut delight என்றும், காரம், இனிப்பு வகைகளை குறிப்பிடப்படும் crepe பெயர்தான் தோசை வகைகளுக்கு வைத்திருக்கிறார்கள்.

இதனைக் கண்ட பலரும் பல பாவனைகளில் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேவேளையில், வெளிநாட்டு மக்களை கவருவதற்காக இப்படியான பெயர்களை வைத்திருக்கிறார்கள் என்றும் கருத்து கூறியுள்ளனர்.