பெங்களூரு சாலை புதியதலைமுறை
டிரெண்டிங்

பெங்களூரு சாலைகளில் முழங்கால் அளவு மழைநீர்: நீந்தி வரும் விதவிதமான மீன்களை பிடித்து விற்கும் மக்கள்!

பெங்களூருவின் முக்கியப்பகுதியில் ஒன்றான யெலஹங்காவில் முழங்கால் அளவு மழை நீரில் விதவிதமான மீன்கள் நீந்தி வருகின்றன. இதை அக்கம்பக்கத்து மக்கள் வலையினாலும் கைகளாலும் பிடித்து வீட்டிற்கு எடுத்துச்சென்று சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

PT WEB

பெங்களூரு சாலை என்றாலே பலருக்கும் போக்குவரத்து நெரிசல்தான் நினைவுக்கு வரும். ஆனால், தற்பொழுது அங்கு சில சாலைகளில் மீன் பிடித்து மகிழும் அளவிற்கு மழை நீரானது குளம் போல் தேங்கி இருக்கிறது.

பெங்களூருவின் முக்கியப்பகுதியில் ஒன்றான யெலஹங்காவில் முழங்கால் அளவு மழை நீரில் விதவிதமான மீன்கள் நீந்தி வருகின்றன. இதை அக்கம்பக்கத்து மக்கள் வலையினாலும் கைகளாலும் பிடித்து வீட்டிற்கு எடுத்துச்சென்று சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

சிலர் மீன்களை விற்று பணமும் சம்பாதிக்கின்றனர். மறுபுறம் தேங்கிய நீரினால் அவதியுறும் மக்கள் மாநில அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்