டிரெண்டிங்

அவிநாசியில் அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் உட்பட 8 பேருக்கு கொரோனா

அவிநாசியில் அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் உட்பட 8 பேருக்கு கொரோனா

kaleelrahman

அவிநாசி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மூன்று நாட்களுக்கு அவிநாசி அரசு மருத்துவமனை மூடப்படுகிறது.


திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு மருத்துவமனையில் 7 மருத்துவர்கள், 14 செவிலியர்கள், 2 ஆய்வக உதவியாளர்கள், 3 உதவியாளர்கள், 3 மருந்தாளுனர்கள், 2 சுகாதாரப் பணியாளர்கள், ஒரு சமையலர் மற்றும் ஒரு பிரேதப் பரிசோதனை உதவியாளர் உட்பட மொத்தம் 33 பேர் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று தலைமை மருத்துவர், தலைமை செவிலியர், உதவி செவிலியர்கள், சுகாதார ஊழியர் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவிநாசி அரசு மருத்துவமனை மூன்று நாட்கள் மூடப்படுகிறது. மருத்துவமனை பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதர பணியாளர்களுக்கு சோதனைக்காக மாதிரிகள் இன்று சேகரிக்கப்படுகிறது.


மேலும் அவிநாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிகள் என பொதுமக்கள் சிகிச்சைக்கு வருவதிலும், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வதிலும் தடை ஏற்பட்டுள்ளது.