டிரெண்டிங்

காவிரி விவகாரம்: ஏப்ரல் 2-ல் அதிமுக உண்ணவிரதம்

காவிரி விவகாரம்: ஏப்ரல் 2-ல் அதிமுக உண்ணவிரதம்

webteam

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல்2ஆம்தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

மதுரையில் அதிமுக சார்பில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைப்பெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அறப்போராக சட்டஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாமல் காலை 9மணி முதல் மாலை 6மணி வரை உண்ணாவிரதப் போரட்டம் நடைபெறும் என்றார்.மேலும் பேசியவர் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியின் உரிமையை அதிமுக ஒருநாளும் விட்டுக்கொடுக்காது எனத் தெரிவித்தார்.

காவிரி நீர் பங்கீடை சுமுகமாக மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டாலும் நீர் பங்கீடுக்கான கண்காணிப்பு குழு உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அலட்சியம் செய்துவிட்டதாக அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரி‌யம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வரும் சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று ‌தகவல் வெளியாகி உள்ளது.