திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில் திரிபுராவில் பெலோனியா என்ற இடத்தில் இடதுசாரி புரட்சியாளர் லெனின் உருவச்சிலை புல்டோசர் உதவியுடன் இடித்துத் தள்ளப்பட்டது. சிலையை உடைத்தவர்கள் பாரத் மாதா கீ ஜே என்று கோஷமிட்டனர். லெனின் சிலை இடித்து தள்ளப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. தெற்கு திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரே நாளில் லெனினின் இரண்டு சிலைகள் இடிக்கப்பட்டுள்ள திரிபுராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.